றுவாண்டா நாட்டிலே 1994 காலப்பகுதியில் நடந்தேறிய ருற்சி இனத்தவருக்கு எதிரான குற்று இனத்தவரின் இனவெறியாட்டத்தை ஆவணப்படுத்தியிருக்கும் திரைஓவியம் தான் Sometimes in April. சிறுபான்மை இன ருற்சி இனப்பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஓர் இராணுவ வீரனின் வாழ்க்கைப் போராட்டமும் சந்தித்த இழப்புகளும் இதன் கதைக்களம். சரியான ஓர் ஆவணப்படத்திற்கு இருக்கவேண்டிய வரலாற்றுப் பெட்டகங்களையும் உள்ளடக்கிய படியே கதை நகர்கிறது. வேறுபாடுகளற்று ஒன்றுபட்டு வாழ்ந்த இரண்டு இனத்தவரிடையேயும் வேறுபாட்டை விதைத்த வரலாற்றுப் பின்னணியைத் தொடக்கத்தில் சொல்ல கதையாசிரியர் தவறவில்லை. இலங்கையைப் போலவே காலானாதிக்கத்தின் பிடியில் சிக்கிக் கிடந்து பின்னர் விடுதலை பெறும் காலப்பகுதியில் பெரும்பான்மை இனத்தவரின் கையில் அதிகாரம் வழங்கப்பட்டதும், அதனை எதிர்த்து சிறுபான்மை இனத்தவர் போராட்டத்தில் குதித்ததுமே இந்த இனப்படுகொலையின் பின்னணியாகக் கூறப்படுகிறது.
1994இல் ஒருநாள் றுவாண்டா அரசதலைவர் பயணம் செய்துகொண்டிருந்த விமானம் இனந்தெரியோதோரால் சுடப்பட்ட பின்னரே இந்த வன்முறைகள் வெடித்தன என்று பொதுவாகக் கூறப்பட்டாலும், ஏற்கனவே ஒரு பாரிய இனப்படுகொலைக்கு அரசும் அதன் இராணுவமும் ஆயத்தமாகி விட்டதைக் கத்தி போன்ற ஆயுதங்களைப் பெரும்பான்மை இனத்தொழிலாளர்களுக்கு வழங்கியும் கொலைக்கான பயிற்சியை இராணுவம் வழங்கியதையும் வைத்துக் கூறலாம். அது போலவே இலங்கை வடகிழக்கின் தமிழர் தாயகப்பகுதியில் திட்டமிட்டமுறையில் குடியேற்றப்பட்ட சிங்களக் காடையர் கையில் ஆயுதங்களை இலங்கை அரசு வழங்கியது. நாட்டில் அசாதாரண நிலை தோன்றத்தொடங்கிய காலப்பகுதியில் நாட்டை விட்டு வெளியேறி விடலாம் ருற்சி இனத்தைச் சேர்ந்த மனைவி சொல்லும் போது, "இது என் தாய் நாடு. ஏன் நாம் இங்கிருந்து ஓடவேண்டும் " என்று கணவன் சொல்ல, "ஒவ்வொரு நாளும் அஞ்சி அஞ்சி உயிருக்குக்குப் பயந்தபடி வாழும் இந்த நாட்டை எப்படி என் தாய்நாடு என்று சொல்வது? " என்று மனைவி கேட்பது நியாயமாகத்தான் படுகிறது. சிறுபான்மை றுற்சி இனத்தவரைக் கரப்பான்பூச்சிகள் என்று சொல்லும் இனவாதவானொலியும் இலங்கையில் ஈழத்தமிழரை வந்தேறுகுடிகள் என்று சொல்லும் பெரும்பான்மை இனவாத ஊடகங்களும் ஒன்றை ஒன்று ஒத்த போக்கையே கொண்டிருக்கின்றன.
றுற்சி பெண்ணுக்கும் குற்று ஆணுக்கும் பிறந்த குழந்தைகள் "அப்பா, நாங்கள் றுற்சியா குற்றுவா?" என்று கேள்வி எழுப்புவது நெஞ்சைக் கனக்கவைக்கிறது. தோற்றத்தில் வேறுபாடின்றி ஒத்திருக்கும் இரண்டு இனத்தவரை அடையாள அட்டையைக் கொண்டு மட்டுமே வேறுபடுத்திப் பார்த்துக் கொலை வெறி நாடகம் அரங்கேறுகிறது. பெண்கள் குழந்தைகள் என்ற வேறுபாடில்லாமல் 100 நாட்களில் 1 மில்லியன் றுற்சி இனமக்கள் குற்று இனவாத அரசாலும் மக்களாலும் தேடித்தேடிக் கொலை செய்யப்படுகிறார்கள். அகதிகளாகத் தேவாலயங்களில் தஞ்சம் புகுந்திருந்த மக்களில் றுற்சி இனத்தவரைக் கிராமசேவகரின் உதவியுடன் அடையாளங் கண்டு அழித்தொழிக்கின்றது இராணுவ இயந்திரம். பார ஊர்திகளில் இறந்தவர்களின் உடல்கள் மலைபோல் குவிக்கப்பட்டுக் கொண்டு செல்லப்படும் போது மனிதம் இன்னமும் வாழுகிறதா என்று கேள்வி எழுப்பத்தோன்றுகிறது.
ஐ.நா.வின் உயர் அதிகாரி ஒருவர் றுவாண்டா இராணுவத்தளபதியைத் தொடர்பு கொண்டு இனப்படுகொலை பற்றிக் கேள்வி எழுப்பிய போது "போராளிகள் எங்களைத் தாக்குகிறார்கள். நாங்கள் அவர்களோடு போராடிக் கொண்டிருக்கிறோம்." என்று படுகொலைகளை மூடிமறைப்பது, இலங்கையில் "பயங்கரவாதிகளைக் கொல்கிறோம்" என்று கூறிக்கொண்டு அப்பாவிப் பொதுமக்களைக் கொல்லும் போக்குக்கு ஒப்பானதாக உள்ளது.
றுவாண்டா நாட்டில் தங்கியிருந்து கல்வி கற்ற வெளிநாட்டு மாணவர்களை ஐ.நா. படைகள் பாதுகாப்பாக மீட்டுச் செல்லும் போது தங்களையும் அந்த வண்டிகளில் ஏற்றிச் சென்று காப்பாற்றுமாறு றுற்சி இன மாணவர்கள் கதறுகிறார்கள். சிலர் அந்த வண்டிகளில் பாய்ந்து ஏறி அடைக்கலம் தேடமுயல்கிறார்கள். ஐ.நா. படைகள் வான் நோக்கித் துப்பாக்கி சூடு நடாத்தி அந்த மாணவர்களை வண்டிகளை நெருங்க விடாமல் அச்சுறுத்துகிறார்கள். வெள்ளை இன மாணவர்கள் தப்பினால் போதும் என்ற ஐ.நா.வின் தன்னலப்போக்கு அதிர்ச்சியடைய வைக்கிறது. அவர்களின் கண் முன்னால் றுற்சி இனமக்கள் கொல்லப்படும் போது அவர்கள் அமைதியாகக் கண்டும் காணமல் போவது வேதனையைத் தருகிறது. எதிரியின் துப்பாக்கியை விட நண்பர்களின் மௌனமே தங்களை வாட்டியது என்று கதையாசிரியர் சொல்வது கண்கூடு.
பிரெஞ்சுப் பெண்கள் விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளிடம் வந்து றுற்சி இனத்தவரைத் தேடியலையும் இராணுவத்திடம் நாங்கள் எல்லோருமே ஒரே மக்கள் என்று துணிச்சலாகக் கூறும் மாணவி துப்பாக்கி முனையால் தாக்கப்படுகிறாள். "இந்தக் பெண்களை உன் குழந்தைகளாக நினைத்துக் கொள். அவர்களை ஒன்றும் செய்யாதே" என்று கெஞ்சும் ஆசிரியை இராணுவத்தால் தாக்கப்படுகிறாள். "என் மகள் கரப்பான்பூச்சி அல்ல" என்று சொல்லிவிட்டு அங்கிருந்த அத்தனை மாணவிகளையும் இனவேறுபாடின்றிச் சுட்டுத்தள்ளுகிறது இராணுவம்.
திரைப்படம் முடிந்த பின்னரும் நெஞ்சை விட்டு அகலாமல் அந்தக் கதாபாத்திரங்கள் நிறைந்திருக்கின்றன. இறந்து போன ஒவ்வொரு உயிருக்குமான கண்ணீரைத் தேக்கி இதயம் கனப்பதை மறுக்க முடியவில்லை. எங்கோ ஓர் ஆபிரிக்க கண்டத்தில் நடந்தேறிய இந்த இனப்படுகொலைகளுக்காக ஓர் அமெரிக்கனோ ஆசியனோ கண்ணீர் வடிக்கின்றான் என்றால் அது அந்த திரைப்படத்திற்குக் கிடைத்த பெரிய வெற்றி எனலாம். இது போன்ற எத்தனையோ மனிதப் படுகொலைகள் ஈழமண்ணில் அரங்கேறியும் அது உலகத்தின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்படவில்லை என்பதற்கு ஈழத்திரைப்படத்துறையின் நலிந்த போக்கே காரணம். அண்மையில் தாயகத்திலிருந்து வெளிவந்த ஆணிவேர் திரைப்படம் ஈழத்தமிழரின் துயர் சொல்லும் திரைப்படத்துறையின் வளர்ச்சியில் ஒரு மைல்கல் என்றால் அது மிகையல்ல. ஆனால் சொல்வந்த கருத்து திரைப்படத்தில் முழுமையாக ஆழமாகச் சொல்லப்பட்டிருக்கிறதா என்றால் அது சிறிய ஏமாற்றமே. ஈழத்தமிழர் தவிர்ந்த வேறு எந்த இனமக்களிடையேயும் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு வீச்சையுடையதாக அந்தத் திரைப்படம் அமையவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. போராட்டத்திற்கான வலுவான காரணியும் இனக்கலவரத்திற்கான பின்னணியும் ஆணிவேரில் மேலோட்டமாகவேனும் அலசப்பட்டிருக்கவில்லை. 1983இல் கொழும்பில் நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட இனப்படுகொலை குறித்த ஒரு திரைப்படமாவது இதுவரை வெளிவந்ததாகத் தெரியவில்லை. சியாம் செல்வதுரை எழுதிய Funny Boy என்ற புத்தகத்தில் இனக்கலவரம் குறித்த நேரடி அனுபவம் ஆங்கில் மொழியில் பதியப்பட்டிருந்தது. ஆனால் புத்தகம் ஏற்படுத்தாத தாக்கத்தை ஏற்படுத்தும் வலிமை திரைப்படங்களுக்கு உண்டு.
ஆணிவேர் திரைப்படத்தின் திரைக்கதை குழப்பம் நிறைந்ததாகவே உள்ளது. குடும்ப அட்டை இருக்கும் வன்னிப்பகுதியில் வாழும் ஒரு மருத்துவர் இறந்து போவதாகச் சொல்லப்படுவதும் இறுதிக்காட்சியில் அவர் உயிரோடு வருவதும் நம்பமுடியாத ஒன்று. அதுவரை அவர் எங்கிருந்தார் என்று குறிப்பாகச் சொல்லப்படவில்லை. காட்சிகள் கோர்வையாக இல்லாததும் ஒன்றோடு ஒன்று தொடர்பற்றதாக இருப்பது கதையின் உயிரோட்டத்திற்கு வலுச் சேர்க்கவில்லை. பத்திரிகை நிருபராக வரும் மதுமிதா இராணுவக்கட்டுப்பாடு நிறைந்த யாழ்ப்பாணத்திற்குச் செல்வதும் அதன் பின்னர் யாழ்ப்பாண இடப்பெயர்வைக் காட்டுவதும் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. வன்னியில் தயாரிக்கப் பட்ட உயிர்பூ, செவ்வரத்தம்பூ போன்ற குறும்படங்கள் ஏற்படுத்திய தாக்கத்தைக் கூட ஆணிவேர் ஏற்படுத்தவில்லை. காட்சியமைப்பும் காட்சிகளின் தரமும் நடிகர்களின் நடிப்பும் நன்றாக இருந்தும் திரைக்கதையின் வலு படத்தின் உயிரோட்டத்திற்குப் போதுமானதாக இருக்கவில்லை.
இந்தக் குறைகளை எல்லாம் களையப்பட்டு, Sometimes in April படத்தில் றுவாண்டா றுற்சி இனமக்களின் அவலம் சொல்லப்பட்டது போல ஈழத்தமிழர் துயர் சொல்லும் ஒரு திரைப்படமாவது வெளிவரவேண்டும். றுற்சி இனப்படுகொலைகள் நடந்தது சித்திரையில். ஈழத்தமிழர் படுகொலை நடந்தேறியது ஆடியில். றுற்சி மக்களுக்கு Sometimes in April என்றால் ஈழத்தமிழருக்கு Sometimes in July. எங்களுக்கான ஒரு திரைப்படம் உலகளவில் வெளிவருமா?
Tuesday, May 01, 2007
Monday, December 18, 2006
கடற்கோள் காவு கொண்ட என் பள்ளித்தோழியின் நினைவலைகள்.
நாட்குறிப்பேடு தை 16 2005
என்னால் நம்பவே முடியவில்லை. வாழ்க்கையின் நிலையாமை குறித்துப் பலர் பலவிதமாகப் பேசக் கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் அதை இந்த இளம்வயதில் உணர்ந்து கொள்ளக் கூடிய நாள் வரும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. நான் நடந்து வந்த பாதையினைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறேன்.எத்தனையோ முள் தடங்கள் எல்லாம் தாண்டி இப்போது வசந்தத்தின் வாசலில் இருப்பதாக நான் நினைத்ததில்லை. முள்ளின் நடுவே மலர்ந்திருக்கும் மலரைப் பார்த்து முட்களை மறந்து போயிருக்கிறேன்.சின்ன சின்ன விடயங்களையெல்லாம் இரசித்து வாழ்க்கையில் சினங்களை மறந்திருக்கிறேன். 1996 ம் ஆண்டு. யாழிலிருந்து இடம் பெயர்ந்து கிட்டத்தட்ட அகதியாய் நான் அந்த உடப்பு மண்ணில் காலடி எடுத்து வைத்த நேரம். பள்ளியில சேர்ந்த முதல்நாள் நீ பழக்கமானாய். காரணம்; யாழ்ப்பாணத்தமிழ் பேசத் தெரிந்த ஒருத்தி அங்கு நீயே தான். இடைவேளையின் போது வகுப்பே கூடியிருந்து ஒன்றாகச் சாப்பிடும். ஓவ்வொருவரும் தாங்கள் கொண்டு வந்த உணவைப் பகிர்ந்து சாப்பிடுவார்கள். என்னால் மட்டும் முடியவில்லை. அவர்கள் தரும் உணவை உண்ணக்கூடாது.வீட்டில் போடப் பட்ட சட்டம். .நான் மட்டும் தனித்தீவாய் ஒரு மாதம் ஓடியது. வகுப்புத் தொழிகளுடனேயே பேசக் கூச்சமாக இருக்கும்.காரணம் நான் பேசும் தமிழ்.அந்நியப் பட்ட ஒரு சூழலில் எனக்கு அணைவாக இருந்தவள் அவள் ஒருத்தி தான். எத்தனையோ நினைவுகள்.இப்போது மீட்டிப் பார்க்கக் கண்கள் குழமாகின்றன. எங்கள் வகுப்பு ஓரத்தில் வெட்டையாய் இருந்த அந்த நிலப்பகுதியில் பூஞ்செடி வைப்போம் என்று முன் மொழிந்தேன்.மறுப்பின்றி நீ வழி மொழிந்தாய்.மறுநாளே ஆளுக்காள் ரோசா,செவ்வந்தி,செவ்வரத்தை,கனகாம்பரம்,நித்தியகல்யாணி என்று கொண்டுவர அந்த இடமே பூஞ்சோலையானது. இத்தனையையும் வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்த ஆண் மாணவர் கூட்டம் அன்றிரவே நட்டுவைத்த அத்தனை செடிகளையும் பிடுங்கி எறிந்து விட்டு எதோ பெண்களையே உலகத்திலிருந்து பிடுங்கி எறிந்து விட்டதாக இறுமாப்புக் கொண்டனர்.மறுநாள் காலை பள்ளி வந்து நீ இவற்றை எல்லாம் பார்த்து அழுதது இன்னும் என் கண்களில் நிற்கிறது. இவர்களையெல்லாம் சும்மா விடக்கூடாது என்று ஆத்திரப் பட்ட நாம் அதிபரிடம் புகார் செய்ததும் மறுநாள் அந்த மாணவர்களே மலர்த்தோட்டம் அமைத்தது கண்டு நீ கேலி பேசிச் சிரித்ததும் இப்போது போல் இருக்கிறது. சில நாட்கள் ஓடிய பின் காலையில் பூஞ்செடிக்குத் தண்ணீர் ஊற்ற வந்த எனக்கு இன்ப அதிர்ச்சி. நான் நட்ட ரோசா பூப்பூத்திருந்தது. என்னையறியாமலே, “ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ” என்ற பாடலைப் பாடியவண்ணம் தண்ணீரை ஊற்றிப் பாத்தி கட்டிக் கொண்டிருந்த நான் ஆளரவம் கேட்டுச் சட்டென்று திரும்பிப் பார்க்க பின்னால் சிறீகாந்தா ஆசிரியர் நமுட்டுச் சிரிப்புடன், “ அம்மணி ரோசாப்பூவை விடப் பாட்டு நல்லா இருக்கு. நீ பாடிப் பாடி தண்ணீர் ஊற்று” என்று கேலியாகச் சொல்லி விட்டு நகர்ந்தார். எனக்கு வெட்கமாகிப் போய் விட்டது. “ அடி! வகுப்பில யாருக்கும் சொல்லாத. சொன்னால் கிண்டல் பண்ணுவாளுக” என்று நான் சொல்லி முடிக்கும் முன்னே நீ வகுப்பு முழுவதற்கும் பறையடித்து விட்டாய். அன்று முழுவதும் உன்னைத் துரத்திக் கொண்டு நான் வர என்னிடமிருந்து தப்பி நீ ஓடியதும், அதன் பின் என்னைக் காணும் பொழுதெல்லாம், ரோசாப்பூ பாடல் பாடிப் பாடித் தோழிகள் வரவேற்பதும் இப்போது நினைக்கும் போது நேற்றுப் போல் இருக்கிறது..ஓவ்வொரு வெள்ளியும் காலையில் சைவமாணவர்களுக்கு சிவபுராணம் ஓதுதல் நடக்கும். உனக்கு அந்த தொல்லையில்லை. வானத்திலிருந்து வையகம் எழுந்த புனித ஆவியே பாடலுடன் இரண்டு செபங்கள் அவ்வளவு தான்.ஆனால் ஏனோ தெரியவில்லை.நீயும் சிவபுராணம் படிக்க வருவாய் எங்களுடன். தொல்லையிலும் பிறவி என்று பாடத்தொடங்கும் போதே எனக்கு சேக்கிழார் மீது எரிச்சல் வரும். ஆனாலும் அவை மகிழ்ச்சியான நாட்கள். நவராத்திரிக் காலத்திலும் காலையில் எழுந்து மாலைகட்டி(மாலை கட்டுவதில் கூட எமக்குள் எத்தனை போட்டி)பனிக்குளிரில் தலைகுளித்து,அப்பப்பா இப்போது நினைத்தாலும் நாடி நாளமெல்லாம் சில்லென்று விறைத்துப் போய் விடுகின்றது. அதை விட நகைச்சுவை தாவணி போடுவது. ஆளாளுக்கு ஒவ்வொரு நிறத்திலே தாவணி அணிந்து கொண்டு ஏதோ அழகிப் போட்டிக்குப் போவது போல் அணிவகுத்து நிற்போம். அதில் கூட நகைச்சுவையாக சொல்வார்கள் ஆசிரியர்கள், “குட்டிகள் எல்லாம் தாவணி போட்டால்தான் வெட்கப்படுதுகள.இல்லையென்றால் இதுகள் எல்லாம் பிசாசுக்கூட்டம்”; என்று. ஏனோ தெரியவில்லை. பெண்களைக் குட்டிகள் என்று சொல்லும் போது எனக்கு எரிச்சலாய் வரும். “குட்டிகள் என்றால் நாங்கள் என்ன நாய்க்குட்டிகளா? இல்லை ஆட்டுக்குட்டிகளா?பெண்கள் என்று சொல்லுங்கோ சேர்” என்று நான் சொல்வேன். நீ மட்டும் அதற்கும் நகைச்சுவையாகஇ “குட்டிகளுக்கு வெட்கப்படத் தெரியாதே சேர்.அதுகளுக்கெல்லாம் ஐந்தறிவு தான்.குமரிகள் வேணுமானால் வெட்கப்படுவாங்க.நாங்கள் குழந்தைகள்.நாங்கள் எப்படி வெட்கப் படுவது” என்று ஆசிரியருக்கு கிண்டல் அடிக்க “ இவளோட பேசி வெல்லமுடியாது”என்று தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு அவர்கள் போவதுகண்டு சிரிப்பாக இருக்கும்.
;நவராத்திரிகாலத்தில் கொலுவுக்கு முன்னால் தேங்காய்ப் பூவினாலும் மாவினாலும் கோலம் போட்டு அழகு படுத்துவோம். இத்தனை செய்தும் அந்த ஆண்மாணவர்கள் எங்களை கடவுளுக்கு மாலை போட விடமாட்டார்கள். “பெண்கள் கட்டிய பூமாலை வேண்டும் ஆனால் பெண்கள் போடக்கூடாது” என்று ஒருத்தி தொடங்க, “அதானே உங்கள் கழுத்திலா போடக் கேட்டோம்.கடவுளுக்குத் தானே போடக் கேட்டோம்” என்று கடிக்க, அத்தனை பெண்களும் கொல்லென்று சிரிக்க பையன்கள் பார்த்து முறைக்க, “ஏண்டா கந்தப்பு முறைக்கிறாய்?” என்று பின்னால் மறைந்திருந்து ஒருத்தி சொல்ல “எவடி அவள் துணிச்சல் இருந்தால் முன்னால் வந்து சொல்” கந்தப்பு தன் வீரத்தைப் பெண்களுக்கு முன் காட்டுவான். “குரைக்கிற நாய் கடிக்காது தானே.” என்று முணுமுணுக்க மீண்டும் ஆண்மாணவர்களுக்கும் பெண்மாணவர்களுக்குமிடையில் அதிகாரப் போட்டி தொடங்கும். ஆனாலும் இத்தனை குறும்புகளுக்கும் கேலிப்பேச்சுகளுக்கும் யாரும் ஆத்திரப் பட்டதோ கோபப்பட்டதோ இல்லை.இத்தனை கேலிப் பேச்சுக்களை ஆரம்பிப்பது நீ என்று ஆண்மாணவர்களுக்குத் தெரியும். அதனால் தான் “டயனா” என்கின்ற உன் பெயரை வைத்து எல்லோரும் “இளவரசி வராடா” என்று கிண்டல் செய்வார்கள்.எங்கள் பள்ளிக்காலத்தைக் கலகலப்பாக்கியவள் நீ என்பது மறுக்கமுடியாத உண்மை.
ஓருநாள் பள்ளிவிட்டு வீடு திரும்பும் வழியிலுள்ள பொதுக்கிணற்றில் பைத்தியக்கார கிழவி அம்மணமாய் குளித்துக் கொண்டிருந்தது. அந்தக் கிழவிக்கு பைத்தியம் என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. எனவே அதைப் பார்த்துக் கொல் என்று சிரித்து விட்டேன். கிழவிக்கு வந்ததே கோபம், “ எந்த சிறுக்கி அவள் என்னைப் பார்த்துச் சிரித்தவள். பொட்டைக்கழுதை! குமரிப்பெண்ணா லட்சணமா இல்லாம கெக்கெக்கே சிரிக்கிறாளுகளாம் சிரிப்பு” என்று ஆத்தா தமிழ் அகராதியிலேயே இல்லாத கெட்ட கெட்ட சொற்களால் திட்ட ஆரம்பித்தது.நான் பயத்தில் விறைத்துப் போய் நின்று விட்டேன். ஆனால் இவள் சும்மா இருக்கவில்லை. “ஏன் ஆத்தாக் கிழவி! நீ குமரிப் பொண்ணா லட்சணமா குளிக்கக் கூடாதா? நீ என்ன சிம்ரானா?” என்று ஏகத்துக்கு எகிற, “ஐயோ, எதுவும் சொல்லாதடி.பேசாம இருடி” நான் இவளை அடக்கமுயல இவள் பேச்சை நிறுத்தி விட்டு ஆத்தாவுக்கு நெளிப்புக் காட்டினாள். ஆத்தாவுக்கு வெறியே வந்து விட்டது.கல் எடுத்துக் கொண்டு எங்களைத் துரத்த ஆரம்பித்து விட்டது. நாங்கள் நாய் படாத பாடு பட்டு ஓட்டம் பிடித்தோம். வீட்டுப் படலையைத் திறந்து உள்ளே நுழையும் வரை என்னால் பதட்டத்தைத் தணிக்க முடியவில்லை.இன்றும் கூட அதை நினைத்து நான் சிரிப்பதுண்டு.
இப்படியெல்லாம் எங்கள் பள்ளிக்காலத்தை வசந்தமாக்கிய நீ இன்று வாய் மூடி எங்களை விட்டுப் போனதென்ன? உனது கடவுள் போதாதென்று எனது கடவுளையும் கும்பிட்டாயே. இருவரில் ஒருவர் கூடவா உன்னைக் காக்க முன் வரவில்லை?.எங்கள் கோவில் திருவிழாவுக்கு நானே போவதில்லை.ஆனால் பட்டை அடித்துக் கொண்டு நீ கிளம்பி விடுவாய்.இன்றும் கூட என்னால் நம்பமுடியவில்லை.உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் நீ இருந்து கொண்டுதான் இருக்கிறாய் என்றே நம்புகிறேன். இன்று காலை தொலைபேசியில் வந்த அந்தச் செய்தி பொய்யாகியிருக்கக் கூடாதா? என ஏங்குகிறேன். இத்தனை நாளாய் உடப்பில் இருந்த நீ எதற்காக முல்லைத்தீவுக்குப் போனாய்? உன்னுடன் உன் அம்மா அக்கா சாந்தமலர் அத்தனையும் போய் விட அந்த அதிர்ச்சி தாங்கமுடியாமல் உன் அப்பா மாரடைப்பால் உயிர்விட்டாரே அது உனக்குத் தெரியுமா? தப்பிப் பிழைத்த உன் தம்பிக்கு நீ தருவது இந்தத் துயரத்தைத் தானா? எனக்கு மட்டும் கால ஓட்டத்தை பின்னோக்கிச் செல்லச் செய்யும் வலு இருந்தால் இத்தனை இழப்புகளைத் தவிர்த்திருக்கலாமே. ஓன்று மட்டும் புரிகிறது. நீர்க்குமிழி போன்றதே வாழ்க்கை.இதில் எதுவுமே நிலையற்றது.ஜென்மங்கள் மீதெனக்கு நம்பிக்கை இல்லை ஆனாலும் சொல்கிறேன் மீண்டும் ஒரு பிறப்பெடுத்தால் ஈழத்தில் தமிழனாய் பிறந்து விடாதே. அழுவதற்கும் அலைவதற்கும் அடிபட்டு அழிவதற்கும் அநாதைகளாய்ப் போவதற்கு அடிமையாய் அகதியாய் வெளிநாடுகளில் தஞ்சம் புகுவதற்கும் தஞ்சம் புகுந்த நாட்டில் சொந்த உறவுகளை வெட்டிச் சாய்ப்பதற்குமே பிறந்த ஈனர்கள் நாங்கள். இனியொருமுறை ஈழத்தமிழனாய்ப் பிறக்காதே.

Sunday, December 17, 2006
கடற்கோள் நினைவு வணக்கம்.
2004ம் ஆண்டு மார்கழித்திங்கள் எம் ஈழமண்ணில் கடலன்னை நிகழ்த்திய கோரத் தாண்டவத்திற்கு இரையாகப் போன எம் மண்ணின் மைந்தர்களுக்காய் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி என் மனதில் அந்த நாள் விதைத்துப் போன மாறாத வடுவை வரிகளில் கொட்டியிருக்கிறேன்.
நீண்ட இரவுகளை எமக்களித்து
நீங்கி நீங்கள் போய் விட்டீர்கள்
மாண்டவர் மீண்டு வருவார் என்று
மனதிலே ஏக்கம் கொண்டு
காத்திருக்கிறோம் எம்
கண்மணிகளே!
துளிரும் பருவத்தில் துடைத்தெடுக்கப் பட்டது
உங்கள் வாழ்வு மட்டுமல்ல
எங்கள் வருங்காலமும் தான்
காத்திருக்கிறோம் என்று சொல்லிவிட்டுக்
கடலோடு போனவரை
வழி மேல் விழிவைத்துப்
பார்த்திருக்கிறாள் எம் மண்ணின்
பருவ மங்கை
அடித்த அலைவழியே அவன் உடலம்
திரும்பியது தெரியாமல்
கந்தகக் காற்று வீசும் மண்ணிலே
செந்தளிர்க் கால் பதித்து நடந்த
எம் குஞ்சுகள்
செந்தணலாகியுன் சீற்றத்தில் போனபின்
நிந்தகம் செய்வமோ நினைக்க மறுப்பமோ
சொல்லு கடலம்மா
சோதனைகள் ஏனம்மா?
பள்ளிப் பருவத்தில்
துள்ளித் திரிந்த என் தோழி
முல்லைக் கடலினிலே
மூழ்கித்தான் போயினளே!
அழுது முடிக்க முடியவில்லை
அருகிருக்க வழியும் இல்லை
நாட்குறிப்புகளிலே
நாளும் அழுகின்றோம்
சுட்டெரிக்கும் வெயிலிலும்
சூரியக் கதிரிலும்
செத்துப் பிழைத்த
எம் குழந்தைகளை
கொத்தும் உன் கொலைக் கரத்தால்
குதறி நீ போட்டதென்ன?
பாரம்மா!
எம் மண்ணைப்
பாலைவனமாய்க் கிடக்கிறது.
கனவு சுமந்த எம் துளிர்களின்
கவிதைகள் எல்லாம்
கானலாய்ப் போனது
துளிர்களைப் பிடுங்கி நீ
துரோகம் இழைத்து விட்டாய்
ஊர் மனைகளில் நீ
ஓலவிதை விதைத்து விட்டாய்
ஊரோடித்திரிந்தவரை
ஊமையாய் ஆக்கிவிட்டாய்
அம்மி மிதித்த மங்கையரை
விம்மி அழவைத்து விட்டாய்.
புலம்பெயர் உறவுகளைப்
புலம்ப நீ வைத்து விட்டாய்
என்ன செய்வது?
மாண்ட உங்களுக்காய்
மௌனமாய் வேண்டிவிட்டு
மீண்டும் இயந்திரமாய்
வேலையும் வீடுமாய்
வாழும் நாமெல்லாம்
ஆங்கிலேய நாடுகளில் உங்களுக்காய்
அழுகின்ற அகதி உறவுகள்.

அகதிகள்
பெற்றெடுத்த அன்னை நாட்டை
வி(ட்)ற்று விட்டு செல்பவர்கள்
சுற்றங்கள் எல்லாம் சொந்தமண்
பற்று பேசின
யுத்தத்தை கண்டு நாம் பயந்ததில்லை- சிந்தும்
இரத்தத்தைக் கண்டு மருண்டதில்லை
ஏதிலியாய் ஆவோம் என
என்றுமே நினைத்ததில்லை
தாய் மண்ணை தாழ்ந்தது என்றதில்லை
தமிழ் மொழியை இழிவாக நினைத்ததில்லை
காற்றடித்தால் கலைவதற்கும் காததூரம் போனால்
காணாமல் போவதற்கும் காகிதமா எம் தமிழுணர்வு?
எம் மண்ணைப் பற்றி பேசுகையில்
எழுகின்ற உணர்வலைகள்
அடிமனதில் மட்டுமே அழுகின்றோம்
ஆங்கிலேய நாட்டின் அகதிகளாய்

Tuesday, December 05, 2006
உடப்பு- சில தகவல்கள்
உடப்பில் வாழும் தமிழர்கள் இந்திய வம்சாவழித்தமிழர்கள் என்றுகருதப்பட்டாலும் இவர்கள் மலையகத்தமிழர்களைப் போன்று அடிமைகளாகவோகூலிகளாகவோ நடத்தப்படவில்லை. 1970_1985 காலப் பகுதிகளில் உடப்பு பணவசதிகொண்ட ஊராகக் கருதப்பட்டது.இத்தனை வசதிகள் இருந்தபோதும் இவ்வூரவர்கள்கல்வியில் அதிகம் நாட்டம் செலுத்தவில்லை. பொதுவாக பெண்கள் அதிகமாகப்படித்திருக்கவில்லை.இன்றும் கூட அந்த ஊரிலிருந்து ஒரு மருத்துவரோபொறியிலாளரோ கணித விஞ்ஞானத்துறைகளில் இளமானிப் பட்டம் பெற்றவர்களோஉருவாகவில்லை. பெண்கள் மிதிவண்டி ஓடினால் அதை அதிசயமாகப் பார்க்கும்போக்கு இன்றும் அங்கு இருக்கின்றது.1990 வரை இந்த ஊரை மேலைத்தேய நாகரீகம்தாக்கவில்லை. பெண்கள் சேலை,பாவாடை, தாவணி அணிவதையே காணக்கூடியதாகஇருக்கும். அதன் பின் ஏற்பட்ட திடீர்மாற்றங்களால் கொழும்புப் பகுதியின் செல்வாக்கால் உடை விடயத்தில் மாற்றம் ஏற்பட்டது. இருந்தாலும் கோவில் திருவிழாக்களிலும் கொண்டாட்டங்களிலும் தங்கள் பண்பாட்டு உடைகளை அணிவது இவர்கள் வழக்கம்.
இந்த ஊரில் வாழும் பெண்கள் அதிகம் படித்திருக்காதமையால் தனித்து வாழ முடியாத நிலையில் உள்ளனர். கணவனையோ பெற்றோரையோ தங்கியிருக்கவேண்டிய சூழ்நிலை இவர்களுக்கு .இவ்வூரில் ஆண்களின் தொகையை விட பெண்களின் தொகை அதிகம். அதனால் இரண்டுக்கும் மேற்பட்ட மனைவிகளைக் கொண்ட ஆண்களை இங்கு காணக்கூடியதாய் இருக்கும். 1990 ல் தமிழர் தாயகப் பகுதிகளில் ஏற்பட்ட போரினால் இவர்கள் முல்லைத்தீவு மன்னார் போன்ற பகுதிகளுக்கு சென்று தொழில் செய்யும் வாய்ப்பினை இழந்தனர். அதனால் வறுமை இவர்களைச் சூழ்ந்து கொண்டது.மீன்பிடி தவிர வேறு தொழில் தெரியாத இவர்களுக்கு சாராயம் காய்ச்சுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. இதனால் பெண்களே சாராயம் காய்ச்சி விற்பது குடிசைக் கைத்தொழிலாகிப் போனது. இது போன்ற கள்ளச்சாராயத்தின் தீமை தெரியாமல் அதைக் குடித்து விட்டு இளம் வயதிலேயே ஈரல் கருகிச் சாவது இங்குள்ள ஆண்களின் தலைவிதி ஆனது.
இவர்கள் வேறு ஊரவர்களைத் திருமணம் செய்வதில்லை. பெரும்பாலான பெண்கள் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணத்திற்காக சீதனம் கேட்கும் வழக்கம் இந்த ஊரில் மிக அரிதான விடயம். மொத்தக்கிராமமே மீனவர்கள் என்பதால் சாதிபற்றி இவர்களுக்கு அதிகம் தெரியாது. இந்தியத் திரைப்படங்களில் தாக்கம் இந்த ஊரில் அதிகம் எனலாம். வீட்டில் ஒரு வேளை உணவிற்கு சிரமப்பட்டாலும் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கும்.ஈழப் போராட்டம் பற்றிய அறிவு இங்குள்ள இளம் தலைமுறையினருக்கு இல்லை. நீர்கொழும்பு,முந்தல்,ஆனைவிழுந்தான்,புளிச்சான்குளம் போன்ற கிராம மக்கள் இலங்கைஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றகாலப்பகுதியில் இந்து மதத்திலிருந்து கிறீஸ்தவர்களாக மாறி பிற்காலத்தில் தமிழ் மறந்து சிங்களம் பேசுபவர்களாக மாறிய பின்னும் இவ்வூரவர்கள் இன்னும் தமிழ் பேசுவதற்குக் காரணம் அவர்களின் தீவிர மத நம்பிக்கை. பார்ப்பன ஐயர்மாரின் தாக்கம் சமீபகாலமாக இங்கு அதிகரித்துள்ளது எனலாம். இருந்தாலும் இங்குள்ள கோவிலில் மரபுவழியான வழிபாடே அதிகமாக நடைபெறுகிறது. சிலவேளைகளில் இவ்வகையான வழிபாடு வெறித்தனமானதாகவும் வன்முறை நிறைந்ததாகவும் எனக்கு தோன்றியது உண்டு. பெண்தெய்வமான காளிக்கு அதிகம் அச்சப் படுகிறார்கள்.ஆண்டின் குறித்த ஒருகாலப்பகுதியில் காளி தெய்வத்திற்கு ஆடு பலியாகக் கொடுக்கிறார்கள்.அப்படிகொடுக்காவிட்டால் ஊருக்கு தீமை உண்டாகும் என்ற அச்சம் இவர்களிடம் அதிகம் உண்டு. இது போல் தீ மிதித்தல், அலகு குத்திக் கொள்ளல், நெஞ்சைக்கத்தியால் (ஆண்கள்) கீறிக் கொள்ளல் போன்ற பயங்கரமான வழிபாடுகள் இங்குஅதிகம். இவையெல்லாம் முட்டாள் தனமான பிற்போக்கானநம்பிக்கை என்று சொன்னால் இவ்வூரைச் சேர்ந்த படித்த ஆசிரியர்களே தங்கள் தெய்வத்தை அவமதிப்பதாக எண்ணிக் கோபப் படுகிறார்கள்.
உடப்பு என்று இந்த ஊருக்கு பெயர் வரக்காரணம் என்று கேட்டால் இருவேறுவிதமான கதைகளைச் சொல்கிறார்கள்.ஒன்று இவர்கள் இந்த ஊருக்கு வந்த போது இவ்வூர் உடை முள் காடாக இருந்ததாம்.இரண்டு மாரிகாலங்களில் கடல் நீரேரியில் நீர் மட்டம்அதிகரித்து ஊருக்குள் தண்ணீர் வரும் போது இவர்கள் நீரேரிக்கும் இந்துமாகடலுக்கும் வாய்க்கால் வெட்டி அந்த நீரை கடலுக்குள்அனுப்புகிறார்கள். அப்போது நிலத்தை உடைத்து வாய்க்கால் கட்டுவதால்"உடைப்பு" என்ற சொல் கால ஓட்டத்தில் உடப்பாக மாறியிருக்கலாம்.
இவ்வூரில் இரண்டு பாடசாலைகள் உள்ளன. இரண்டிலுமே க.பொ.த உயர்தர(தரம்12_13)கணித விஞ்ஞானப் பிரிவுகள் இல்லை.சாதாரண தரத்தில் கற்பிக்க(தரம் 11)ஆங்கில விஞ்ஞான கணித ஆசிரியர்கள் அதிகம் இல்லை.இது குறித்து மாவட்டகல்வித்திணைக்களத்துடன் போராடி ஆசிரியர்களை பெற்றுக் கொள்ளும் அக்கறை இங்குள்ள இளைஞர்களுக்கு இல்லை. ஓரு சில படித்த இளைஞர்கள் இலவசவகுப்புக்களை நடாத்தி கல்வி தொடர்பான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தமுயல்கின்ற போதிலும் அது மக்களால் அதிகளவில வரவேற்கப்படவில்லை. தொடர்ந்தும் வடபகுதி யாழ்ப்பாணப் பகுதியிலிருந்து ஆசிரியர்களும் மருத்துவர்களும் அரசினால் இங்கு நியமனம் செய்யப் படுகின்ற போதிலும் அவர்கள் சிறிதளவு காலமே இங்கு தங்குகிறார்கள். காரணம்மருத்துவ நிபுணர் படிப்போ அல்லது முதுமானி முனைவர் படிப்போ படிப்பதற்கு இங்கு பல்கலைகழக வசதி இல்லை. போக்குவரத்து வசதியும் மிகக் குறைவு. சரியானசாலை பெருந்தெரு வசதி இவ்வூருக்கு இல்லை.
1980களிலிருந்து ஒரே ஒரு யாழைச் சேர்ந்த மருத்துவர் இவ்வூரிலேயே தங்கியிருந்து வேலை செய்து கொண்டிருக்கிறார். இங்குள்ள அதிக வசதிகளற்ற கிராமிய மருத்துவமனையில் இவர் தொடர்ந்து பணிபுரிவதால் அவர் ஓய்வுபெற்றபின்னரும் கூட மக்கள் அவரை விடுவதாக இல்லை."கைராசியான மருத்துவர்"என்று அவர் மீது நம்பிக்கை கொண்டுள்ள இவர்கள் அவருக்கு கொடுக்கும் மரியாதை மிக மிக அதிகம். தாங்கள் பிடிக்கும் மீனை இவருக்கு கொடுப்பதும் மருத்துவருக்கு எழுந்து நின்று மரியாதை கொடுப்பதும் வயதில் முதியவர்கள் கூட இவரை ஐயா என்றழைப்பதையும் பார்க்கும் போது தமிழ் நாட்டில் பண்ணையார் நாட்டாமை போன்றவர்களுக்கு அடிமைகளாக நடப்பவர்களை போல் தோன்றும். இது போல் படித்த பிற ஊரைச் சேர்ந்தவர்களுக்கு இவர்கள் கொடுக்கும் மரியாதை மிகஅதிகமோ அல்லது அடிமைத்தனமோ என எண்ணத் தோன்றும்.
இவ்வூரவர்கள் வீட்டையும் முற்றத்தையும் மிகத் தூய்மையாக வைத்துக் கொண்ட போதும் வீதிகளில் காயவிடுகின்ற கருவாடும் மீன் கழிவுகளாலும் உண்டாகின்ற ஈபெருக்கத்தினால் அடிக்கடி வாந்திபேதி, வயிற்றோட்டம்,காய்ச்சல் போன்றன ஏற்படுகின்றன.இது குறித்து கிராமிய மருத்துவமனை விழிப்பாக இருப்பதாலும் மருந்து வசதிகள் தாராளமாய்க் கிடைப்பதாலும் பெரிதாக இறப்புக்கள் ஏற்படுவதில்லை. கிராமிய மருத்துவ மனையினால் முன்னெடுக்கப் பட்ட குடும்பக்கட்டுப் பாட்டுத்திட்டம் இங்கு வெற்றியளித்திருக்கிறது என்றே கூறவேண்டும். ஏனெனில் இந்த தலைமுறையைச் சேர்ந்த குடும்பங்களில் இரண்டுக்கு மேற்பட்ட பிள்ளைகளைப் பார்ப்பது மிக அரிதாகவே உள்ளது.
இவ்வூரை அடிக்கடி தாக்கும் இன்னொரு ஆபத்து அம்மை,சின்னம்மை,கொப்புளிப்பான் போன்ற வைரசுநோய்கள். இதற்கு அவ்வூரின் காலநிலை மாற்றமும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் போவதுமே காரணம் என மருத்துவர்கள் நம்பினாலும் இவ்வூரவர்கள் அதைச் சாமி குற்றமாகக் கொள்கிறார்கள். இந்நோய் ஏற்பட்டவர்கள் கோவில்களில்தங்கியிருந்து நோய் குணமடைந்த பின் அம்மனைக் குளிரவைக்க ஒருவகை கஞ்சியை அம்மனுக்கு படைத்து அதன் பின்னரே வீடு செல்கிறார்கள்.இது போலவே அம்மனை மனம் குளிர வைக்க பெண்கள் ஆண்டின் ஒருகாலப்பகுதியில்(எந்த திங்கள் என்று சரியாக நினைவில்இல்லை)முளைப்பா(வேறுபட்ட தானியங்களை ஒரு சாடியில் வளர்த்தல்) பதியம் போட்டு அவை வளர்ந்ததும் இறுதி நாளில் அதனைக் கடலில் போட்டுக்கரைப்பர்.அந்த இறுதி நாளில் இளம் பெண்கள் ஒரே மாதிரி சேலை அணிந்து கடற்கரையில் கும்மி கொட்டுவர்.இதனை வேடிக்கை பார்க்க ஆண்கள் வருவார்கள்.இந்நிகழ்வினால் அம்மனின் மனம் குளிர்வடைந்து நல்ல கணவனை அந்தப் பெண்கள் பெற்றுக் கொள்வார்கள் என்று அவ்வூரவர்கள் காரணம் கூறினாலும் இது கூட ஒருவகைச் சுயம்வரமோ என்று எனக்கு எண்ணத்தோன்றுகின்றது. ஏனெனில் இந்நிகழ்விலேயே அதிகமான ஆண்கள் தங்களுக்குரிய வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்து கொள்கிறார்கள். பெண்களும்இந்நிகழ்வுக்கு செல்லும் போது வழக்கத்தை விட அதிகமாக நகையணிந்து பட்டு உடுத்தி ஒப்பனை செய்து கொள்கிறார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் இது கூட ஒரு பெண் பார்க்கும் படலம் தான்.
இங்குள்ள பெண்களுக்கு நகைகள் மீதும் உடைகள் மீதும் அதிக ஆசை.திருவிழாக்காலங்களில் கடன் பட்டேனும் உடைகளும் நகைகளும் வாங்கிவிடுவார்கள். சேமிப்பு பழக்கம் இவர்களிடம் இல்லாத ஒன்று. பணம் கிடைக்கும்போது அளவுக்கு மீறி ஆடம்பரமாகச் செலவழிப்பதும் பணம் இல்லாத போது நகைகளைஅடைவுக்கு வைத்தோ விற்றோ பணம் எடுப்பதும் இவர்கள் வழக்கம். வங்கியில்பணத்தை வைப்புச் செய்பவர்களை விரல்விட்டு எண்ணலாம்.மாதத்தில் ஒரு தடவையேனும் திரையரங்குகளுக்கு குடும்பமாகச் சென்று படம் பார்ப்பது இவர்கள் வழக்கம். இதற்காக பலர் சிலாபம் நகரிற்கு பேரூந்தில் சென்று படம் பார்ப்பார்கள்.
இங்குள்ள அரசியல் தமிழகத்து அரசியலைப் போன்றது. இவ்வூரைச் சேர்ந்தவர்கள் இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளிற்கே ஆதரவு கொடுக்கிறார்கள்.இதனால் தொண்டர்களுக்கிடையே அடிதடி மோதல்களைத் தேர்தல் காலத்தில் காணக்கூடியதாய் இருக்கும்.இவ்வூரில் களவு கொலை போன்ற குற்றங்கள் நடப்பது இல்லை.ஆனால் தற்கொலை வீதம் இங்கு அதிகம் எனலாம். அதுவும் காதல் தோல்வியாலும் கணவன் மாமியார் கொடுமையினாலும் தற்கொலை செய்துகொள்ளும் பெண்கள் அதிகம். ஆண்கள் குடித்து விட்டு மனைவியரை அடிப்பது பார்க்க கொடுமையாக இருக்கும். படிப்பறிவு இல்லாத காரணத்தால் இப்படியான வேறு பெண்ணை நாடிச்செல்லும் ஆண்களையும் கொடுமைப் படுத்தும் ஆண்களையும் சட்டத்தின்பிடியில் நிறுத்துவது இவர்களால் முடியாத செயல்.ஒரு சில பெண்கள் தண்டிப்பதாக நினைத்துக் கொண்டு கணவரைக் கத்தியால் வெட்டியகொடுமைகளைக் கேள்விப் பட்டதுண்டு. இவர்களின் இந்த முடிவினால் பாதிக்கப்படப் போகும் பிள்ளைகளை இவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை.படிப்பறிவு இல்லாதமையால் உண்டான தன்னம்பிக்கையின்மையும்அவசரத்தில் எடுக்கும் முட்டாள் தனமான முடிவுகளுமே இவர்களின் இந்த நிலைக்கு காரணம். இந்நிலை மாறவேண்டுமானால் ஒரே வழி பெண்கள் படிக்கவேண்டும். ஆனால் "பெட்டை கழுதைக்கு படிப்பு என்னாத்திற்கு?கல்யாணம் கட்டினமா பிள்ளை பெத்தமா என்று இல்லாமல்" என்று கிராமத்துக் கிழவிகளே சொல்லும் போது எப்படி விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவது? தாங்கள் பிறந்ததன்நோக்கமே திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்வதுதான் என்று எனது தலைமுறைப் பெண்களே நினைப்பது வேதனை.இவற்றிலிருந்து விடுபட்டால் மட்டுமே இந்த ஊருக்கு விடுதலை. இவர்களுக்கு இப்போது வேண்டியது இனவிடுதலைஅல்ல.சமூக விடுதலை.

வீடு
" காணி நிலம் வேண்டும் பராசக்தி " என்ற பாரதியின் பாடல்வரிகள் தான் என் நினைவுக்கு வருகின்றன. சின்னவயதிலிருந்தே வீட்டுக்கான என் கனவு தொடங்கி விட்டது என நினைக்கிறேன். சரியாக 8 வயதிருக்கும், நான் என் சொந்த வீட்டை விட்டு இடம்பெயர்ந்து வாடகை வீடுகளுக்கும் உறவினர் வீடுகளுக்கும் குடிபெயர்ந்து அவர்கள் போடும் நிபந்தனைக்கெல்லாம் அடிபணிந்து, சீ என்ன வாழ்க்கை இது என்று புலம்பி, இடம்பெயர்ந்து போகும் இடங்களில் தங்க இடமில்லாமல் அலைக்கழிக்கப் பட்டு இப்படி 8 வயதிலிருந்தே வீட்டுக்கான என் கனவுகள் தொடங்கிவிட்டன. பெரிய மாளிகையெல்லாம் வேண்டாம். சொந்தமாக ஒரு சிறுகுடிசை. சும்மாவா சொன்னார்கள் எலி வளை என்றாலும் தனிவளை வேண்டும் என்று.
இப்பவும் எனக்கு நினைவிலிருக்கிறது. எனக்கு அப்போது 5 அல்லது 6 வயதிருக்கும். இந்திய அமைதிகாக்கும் படை என் நாட்டில் இருந்த காலப்பகுதி. நாங்கள் தங்கியிருந்த வீடு என் ஐயா என் அம்மாவுக்குச் சீதனமாகக் கொடுத்த பாரம்பரிய வீடு. என் அம்மம்மாவுக்கு அவரின் தாயார் கொடுத்த வீடாம். அதைப்பற்றி அம்மம்மா கதை கதையாகச் சொல்வார். என் அம்மம்மாவுக்கு 3 சகோதரிகள். அம்மம்மாவின் தந்தை அதாவது என் பூட்டனார் தன் பெண் குழந்தைகளுக்கு அந்தப் பெரியவீட்டை 4 பங்காகப் பிரித்து ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதியை சீதனமாக எழுதிவைத்தார். இவர்களுக்குத் திருமணமான புதிதில் 4 சகோதரிகளும் ஒரே வீட்டிலேயே கூட்டுக்குடித்தனம் நடாத்தினார்களாம். பின்னர் பிள்ளைகள் பிறக்கத்தொடங்க அம்மம்மாவின் சகோதரிகளில் இருவர் தங்கள் கணவர்மார் இருந்த ஊர்களில் புதிதாக வீட்டைக் கட்டிக்கொண்டு இந்தப் பழைய வீட்டின் பங்குகளை அம்மம்மாவுக்கு விற்றுவிட்டுப் போய்விட்டார்களாம். இருந்த பழைய வீட்டை ஐயா தன் உழைப்பால் செப்பனிட்டு புதிதாக வரவேற்பறை போட்டு அம்மாவின் திருமணத்தின் போது அதை அம்மாவுக்குச் சீதனமாகக் கொடுத்து விட்டார். அந்த வீட்டின் ஒவ்வொரு நிலையிலும் ஐயாவின் உழைப்பு மிளிர்வதாக அம்மா பெருமைப் பட்டுக்கொள்வார்.
இது பாரம்பரிய வீடு என்பதால் மேற்கத்து வீடுகளுக்கு உண்டான கவர்ச்சியோ அழகோ இந்த வீட்டுக் கிடையாது. வீட்டுக்கு முன்னால் ஒரு மல்லிகைப்பந்தல். இது என் அப்பாவின் கைவண்ணம். மாலை நேரங்களில் அந்த மல்லிகை மொட்டவிழத்தொடங்க அதன் சுகந்தத்தில் நாங்கள் மயங்கிப்போவோம். மல்லிகைப் பந்தலின் கீழ் கடற்கரை வெண்மணலைப் போட்டு நான் விளையாட அப்பா வசதி செய்திருந்தார். மாலை மங்கி இருட்டத்தொடங்கும் போது அம்மாவும் அப்பாவும் தோட்டத்தில் வேலை செய்து விட்டு களைத்து வருவார்கள். கூடவே எங்கள் மாடுகளும் ஆடுகளும் அவர்களோடு வரும். என்ன தான் புல் மேய்ந்தாலும் வீட்டிலிருக்கும் பூங்கன்றுகளைத் தின்பதில் இவைகளுக்கு பேரவா. அம்மா ஒருபுறம் கயிற்றில் கட்டியிருக்கும் மூக்கணங்கயிற்றைப் பற்றியிழுக்க மாடுகளோ மல்லிகைப்பந்தலை நோக்கி அம்மாவை இழுக்க அங்கோ ஒரு பெரிய போராட்டமே நடக்கும். நான் ஒரு சிறிய குச்சியை வைத்துக் கொண்டு கொய் கொய் என்று மாடுகளை மிரட்டமுயன்றாலும் அவை கேட்பதில்லை. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பூங்கன்றின் கொப்பாவது அவற்றின் வயிற்றிற்கிரையாகிவிடும்.வீட்டின் முன் படலைக்கு அருகிலேயே ஒரு மருதாணி மரம். அவ்வப்போது அதன் இலைகளை அரைத்து கையில் பூசி சித்தி அழகு பார்ப்பார். மாடுகளுக்கு ஏனோ அந்த மரத்தைப் பிடிப்பதில்லை. அவை ஒருபோதும் அதனை உண்ண முற்பட்டதில்லை.
வீட்டுக்கு வந்ததும் அப்பாவும் அம்மாவும் குளிப்பார்கள். பின்னர் அம்மா முற்றத்தில் தண்ணீர் தெளிப்பார். அப்போது கிளம்பும் புழுதியின் மணம் எனக்கு பிடித்திருந்தது. வீட்டுத்திண்ணையில் தண்ணீரை ஊற்றிக் கழுவி விட்டு இருட்டியதும் அதில் தலை வைத்துப் படுத்திருந்து பிபிசி தமிழோசை கேட்போம். வெங்காயச் செய்கை காலங்களில் வீட்டின் ஓரத்திலிருக்கும் வெங்காயக் கொட்டில் வெங்காயப்பிடிகளால் நிறைந்திருக்கும். அம்மாவும் அம்மம்மாவும் உட்கார்ந்திருந்தபடி வெங்காயம் நுள்ளிக் கொண்டிருப்பார்கள். சிலவேளை சித்திமாரும் அவர்களோடு சேர்ந்து வெங்காயம் நுள்ளுவதுண்டு. அம்மம்மா ஐயா சித்தி, மாமாமாரோடு பக்கத்திலேயே 4 வீடுகள் தள்ளி ஒரு வீடு கட்டி அங்கு குடியிருந்தார்கள். நாங்கள் அந்த வீட்டுக்கும் இந்த வீட்டுக்குமாக மாறி மாறி ஓடியபடி இருப்போம்.
எங்கள் வீட்டுக்குக் கிணற்றில் துலா இருந்தது. துலாவில் தண்ணீர் இறைப்பதென்றால் எனக்குக் கொள்ளை ஆசை. ஆனால் எனக்குச் சின்ன வயதாக இருந்ததால் அம்மா என்னை அனுமதிப்பதில்லை.மின் வசதி இருந்த காலப்பகுதியிலும் துலாவில் தண்ணீர் இறைத்தே நாங்கள் வீட்டின் பின்னால் இருந்த எலுமிச்சை மரங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவோம். ஐயா கட்டியிருந்த புது வீட்டின் கிணற்றில் தண்ணீர் இறைப்பதானால் ஐயா துலா மிதிப்பதுண்டு. வாளிக்குப் பதிலாக பட்டை என்றழைக்கப்படும் பனையோலையாற் செய்யப்பட்ட கடகங்களை ஐயா பயன்படுத்துவார். இந்தப் பட்டைகளைச் செய்வதில் என் ஐயாவின் தந்தை அதாவது அப்பு கைதேர்ந்தவர். அவரின் கை வண்ணத்தில் விதவிதமான பட்டைகளை நேர்த்தியாகச் செதுக்கியிருப்பார்.
நாங்கள் ஊரில் இருந்தகாலப்பகுதியில் எங்கள் வீட்டை எங்களுக்குப் பிடிப்பதில்லை. காரணம் அது பழைய காலப்பாணியில் கட்டப் பட்டிருந்தது தான். மாரிகாலத்தில் பழையவீட்டிற்கும் புதிதாக ஐயா கட்டிய வரவேற்பறைக்கும் இடையிலிருந்த கூரைப்பகுதியில் இருந்த தகரம்( பீலி என்பார்கள்) துருப்பிடித்துப் போயிருந்தது. அதனால் அது ஒழுகத்தொடங்கும். அதிகமாக மழை கொட்டும் காலப்பகுதியில் வீட்டு வரவேற்பறைப் பகுதியில் தண்ணீர் ஆறாக ஓடும். நாட்டுப் பிரச்சனை சரியாகும் போது கூரையைச் சற்று உயர்த்தி இந்தத் தகரத்தை இல்லாமற் செய்து அந்தப்பகுதியில் முகட்டு ஓடுகளைப் போட்டு சரிசெய்யவேண்டும் என்று அப்பா அடிக்கடி சொல்வார்.இதைத்தவிர வீட்டில் எந்தக் குறையையும் சொல்லமுடியாது. அளவுக்கு மீறியே அது பெரிதாக இருந்தது. எங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே அறைகள் இருக்குமளவிற்கு வீடு பெரிதாகவே இருந்தது. பல அறைகளைப் பாவிக்காமல் சும்மாவே வைத்திருந்தார்கள்.
1987 பகுதிகளில் நாங்கள் இடம்பெயர்ந்து யாழ் நகர்ப்பகுதிக்கும் பின்னர் வன்னியில் நட்டாங்கண்டுப் பகுதிக்கும் இடம்பெயர்ந்து சிறிது காலம் வாழ்ந்தோம். இந்திய அமைதிப்படை எங்களூரை விட்டு போனதும் மறுபடி அங்கு குடிபோனோம். சிறிது பற்றை மண்டிப்போயிருந்த வளவையும் இருண்டு போயிருந்த வீட்டையும் சீராக்க ஒருவாரம் எடுத்தது. இருந்தாலும் ஊரில் பழைய கலகலப்பும் அமைதியும் திரும்பியிருந்தது. அமைதிப்படை இருந்த காலத்தில் காணாமல் போன அமைதி அவர்கள் போனதும் மீண்டு வந்திருந்தது. எனக்குத் தெரிந்த ஓரிரு சொந்தங்களும் உறவினர்களும் வீடுகளில் படங்களில் மாலைகளோடு தொங்கிக் கொண்டிருந்தது மனவேதனையைத் தந்தாலும் ஊர் தன் பழைய நிலைக்கு வேகமாகத் திரும்பிக் கொண்டிருந்தது.89 தொடக்கம் 91 காலப்பகுதியில் அடிக்கடி இடப்பெயர்வுகள் நடந்தன. ஊருக்குள் இராணுவத்தினர் வரும் போது எங்கள் ஒரு சில உடைமைகளோடு ஊரை விட்டுப் போவதும் இராணுவத்தினர் பின் வாங்கும் போது மறுபடியும் ஊர் திரும்புவதுமாக 2 ஆண்டுகள் போனது. ஆனால் ஒவ்வொரு தடவையும் ஊரை விட்டுப் போகும் போதும் எனது வீட்டை மறுபடியும் பார்ப்பேன் என்ற நம்பிக்கையோடு விடை பெறுவோம். 91 மார்கழியில் அந்த நம்பிக்கை உடைந்து போனது. இனி ஊருக்கே போகமுடியாது. அங்கு வாழ்வது ஆபத்தானது, எங்கள் காணி நிலங்களில் புதைக்கப்பட்ட மிதிவெடிகளோடு எம்மால் வாழ முடியாது என்ற நிலை தோன்றியபோது நாங்கள் முழுவதுமாக உடைந்து போனோம்.
சரியாக 8 வயதில் என் வாடகை வீட்டுக் குடித்தனம் தொடங்கியது.ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான கட்டுப்பாடுகள். சில ஊர்களில் கிணறுகள் பொதுவானதாகத்தான் இருக்கும். மற்றவர்கள் இல்லாத நேரங்களில் போய் நாங்கள் குளித்துவிட்டு வரவேண்டும். முற்றத்தில் மரம் நடாதே, வீட்டில் ஆணி அடிக்காதே, விரத நாட்களில் மீன் சமைக்கக் கூடாது, ஆடு மாடுகள் அறவே கூடாது இப்படியெல்லாம் ஆயிரத்தெட்டு கட்டுப்பாடுகள். ஒவ்வொரு ஆண்டும் இடம்பெயர்வுகளும் அலைக்கழிவுகளும் என பலவீடுகளுக்குத் தாவினோம். சில வீடுகள் மாளிகை போல் இருந்தன. சில வீடுகள் சிறிதாக இருந்தன. சிலவீடுகள் மேற்கத்துப் பாணியில் கட்டப்பட்டிருந்தன. ஆனால் எந்த வீட்டிலும் எங்கள் பழைய வீட்டில் இருந்த மகிழ்ச்சி இருக்கவில்லை.
ஊரில் எங்கள் உறவினர் ஒருவரின் வீட்டை அமைதிப்படை அமைதியான ஒரிரவில் எரிகுண்டு வீசி எரித்தது. அந்த வீட்டின் கரிபடிந்து போன பழைய நிலைகளைப் பார்த்து நான் வருந்துவேன். அப்போதெல்லாம் என் தம்பி சொல்வான் "அந்த வீட்டை எரித்ததற்குப் பதிலாக எங்கள் வீட்டை எரித்திருக்கலாம் ". ஏனடா என்று கேட்டால், " இல்லை இந்த வீடு பழைய வீடுதானே. இதை எரித்தால் நாங்கள் புதிதாக கண்ணாடி போல் வீடுகட்டலாம் " என்பான். இப்போது இந்தக் கனடா நாட்டில் தொடர்மாடிக்குடியிருப்புகளில் வாடகைக்குக் குடியிருக்கும் போது எங்கள் சொந்த வீட்டின் வாசனை மீண்டும் கிடைக்காதா என்று மனம் ஏங்குகிறது. இந்த நாட்டில் வீடு வாங்குவதென்றால் அது இப்போதைக்கு முடியாத காரியம். படிப்புக்கான செலவுகள், மருத்துவச் செலவு, வாகனக்காப்புறுதி என உழைக்கும் பணம் முழுவதும் அதற்கே செலவாகின்றது. படித்து முடிந்து வேலை கிடைக்கும் வரை என் வீட்டுக்கான கனவுகளுக்கு விடை கொடுக்கவேண்டியது தான். நான் வீடுகட்டினால் அதற்குத் தாயகம் என்று பெயர் வைப்பதாக இருக்கிறேன். தாயகத்திலுள்ள என் வீட்டில் நான் இறப்பதற்கு முன் ஒரே நாள் ஒரே ஒருநாள் வாழவேண்டும். அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்குமோ தெரியாது. கால ஓட்டத்தில் என் வீடு உடைந்து போகலாம் அல்லது காணாமற் கூடப் போகலாம். ஆனால் எதிர்காலத்தில் நாங்கள் கட்டியமைக்கப் போகும் என் தாயகத்தில் நான் குடியிருப்பேன் என்ற நம்பிக்கை நிச்சயமாக இருக்கிறது. அட, வீட்டைத் தான் சொல்கிறேன். நம்புங்கள்.

Thursday, November 30, 2006
ஊர் வரும் பாதை தெரியாமல் - உங்கள்
உறவினில் ஒன்று வாடுதம்மா
போர் முரசம் உங்கு கேட்கையில் - இந்த
பாவையின் மனம் தடுமாறுதம்மா (தாயகமே..)
ஆற்றங்கரையின் ஓரத்தில்- ஊஞ்சல்
ஆடி வளர்ந்த ஆலமரம்
மாமன் வீட்டுத் தோட்டத்தில் - அஞ்சி
மறைந்திருக்கும் அணிற்பிள்ளை
அத்தனையையும் இழந்து விட்டோம்-இந்த
அவசர வாழ்க்கைக்குள் நுழைந்து விட்டோம்.
தாலாட்டை மறந்து விட்டோம் - ஈழத்
தாய் மடிவாசம் இழந்துட்டோம்
விழிகளில் ஈரம் துடைத்து விட்டு- ஈழ
விடியலுக்காக காத்திருப்போம் (தாயகமே...)
அன்னை மண்ணின் அரவணைப்பில் - அன்பில்
ஆடிமகிழ்ந்த காலம் அது
தென்னம் ஓலைக் கூரையில் -அன்பைத்
தேக்கிவைத்த குடிசை அது.
அத்தனையையும் இழைந்து விட்டோம் - இந்த
அந்நிய வாழ்வுக்குள் இணைந்து விட்டோம்.
தோட்டம் துரவுகளை இழந்து விட்டோம்- எங்கள்
தோழமை உணர்வைத் தொலைத்து விட்டோம்
மனதினில் பாரம் சுமந்து கொண்டு- எங்கள்
மண் விடுதலைக்காக காத்திருப்போம்.
(தாயகமே..)
செந்தமிழீழத் தமிழ்ப் பிள்ளை - இங்கு
சொந்த மொழி பேச மறுக்கின்றாள்
வந்த பாதையின் சுவடு மறந்து - சொகுசாய்
வாழும் தமிழ் மகனும் இருக்கின்றான்.
காலநதி நீரின் ஓட்டத்தில் - எங்கள்
கன்னித் தமிழ் இங்கு செத்திடுமோ?
ஞாலம் நிலைக்கின்ற காலம் வரை -அது
ஞாயிறு போல நிலைத்திடுமோ.
சொந்த மண் தாண்டி வந்து விட்டோம் - என்று
சொந்த மொழி பேச மறப்போமோ?
புலம்பெயர் மண்ணின் புதுமொழியில்
புலம்பிப் பண்பாடு மறப்போமோ?
(தாயகமே...)

Saturday, November 25, 2006
மெல்லத்தமிழ் இனிச் சாகுமா?
நிலைக்குமா தமிழ் இந்நாட்டில்..?
மெல்லத்தமிழ் இனிச் சாகும் - எனச்
சொல்லி வைத்த எம் பாரதியே- கனடாவில்
மெல்லத் தமிழ் இனிச் சாகும்
ஆரியரும் பின் வந்த அந்நியரும்
அடிமைப்படுத்த முடியாத எம் மொழியை- கனடா
காளையரும் கன்னியரும்
கழுத்தறுக்கும் நிலை பாரம்மா..
நுனி நாக்கு ஆங்கிலமும்- வாயில்
நுழையாத பிரெஞ்சும்- இங்கு
தனியாட்சி நடாத்துதம்மா- நம்
தமிழ் இங்கு சாகுதம்மா
மெல்லத்தமிழ் இனிச்சாகும்.......
பாரதியும் பின்வந்த பாரதிதாசனும்
கம்பனும் கண்ணதாசனும்
பாடிய எம் தமிழ்- இன்று
வீடிழந்து போகலாமா?
ஆயிரம் அறிவுமதிகளும்
அண்ணன் காசியானந்தனும்
போற்றும் எம் தாய்மொழி- இங்கு
போக்கற்றுப் போகலாமா?
புரட்சிக் கவி புதுவையும்
புலித்தலைவன் பிரபாவும்
சொத்தெனப் போற்றும் என் தாய்மொழி- இன்று
செத்து விழலாமா?
ஓ! தமிழ்க் குடிமகனே - இங்கு
தமிழ் நிலையைப் பாரடா - உன்
தனித் தமிழ் முயற்சியால்- இத்
தலைவிதியை மாற்றடா
ஆக்கமிகு வேலைத்திட்டம்
ஆயிரம் நீ தீட்டடா
பூக்கும் தனித்தமிழீழத்தில்- அதன்
புகழை நிலை நாட்டடா
பாட்டுக்கொரு தலைவன்
பாரதி போல் வாழடா- நீ
போற்றும் பெண் தமிழைப்
பொன் போல பாரடா
வாட்டமுறும் போது- திரு
வள்ளுவனைப் பாரடா- வாழ்க்கையில்
ஓட்டம் பல கண்டாலும்- தமிழில்
நாட்டம் நீ காட்டடா
Saturday, September 23, 2006
பல்கலைக்கழகங்களும் பண்பாட்டுச் சீரழிவும்.
கனடா வாழ் தமிழர்களிடையே பல்கலைக்கழகக் கல்வி என்பது இன்றியமையாத ஒன்று. ஒவ்வொரு பெற்றோரும் தத்தமது பிள்ளைகள் பல்கலைக்கழகம் சென்று கல்வி பெறவேண்டியதன் தேவையை உணர்ந்துள்ளனர். பிள்ளைகளின் கல்வி தொடர்பாக பெற்றோரிடையே ஒரு மயக்கமான கருத்து நிலவுகின்றது என்பதைச் சுட்டிக் காட்டுவதே இந்தக் கட்டுரையின் குறிக்கோள். கனடா நாட்டிலே சில பல்கலைக்கழகங்கள் குறிப்பிட்ட துறைகளுக்குப் பெயர்போனவை. அவ்வாறான பல்கலைக்கழகங்களில் கற்கும் மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வேறு இடங்களுக்குப் படிக்கப் போகும் போது வரவேற்பும் வேலைவாய்ப்பும் இலகுவாகக் கிடைக்கின்றன. அதனால் பெற்றோர் அவ்வாறான சிறந்த பல்கலைக்கழகங்களில் தங்கள் பிள்ளைகள் கல்விபயில வேண்டும் என்ற பேரவாக் கொண்டு அவர்களை அந்தப் பல்கலைக்கழகங்களிற்குப் படிக்க அனுப்புகின்றனர்.
பெரும்பாலான தமிழர்கள் கார்பரோ நகரிலும் மிசிசாகா, மார்க்கம் போன்ற நகர்களிலும் குடியிருப்பதால் அவர்களுடைய பிள்ளைகள் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் போது பெற்றோர்களைப் பிரிந்திருக்கவேண்டிய சூழல் ஏற்படுகிறது. வீடுகளில் மற்ற நண்பர்களோடு குடியிருக்கும் இவர்களை வழிநடத்தவோ பண்படுத்தவோ பெற்றோரோ பெரியோரோ இல்லாத சூழ்நிலையில் இவர்கள் வாழ்கிறார்கள். பல்கலைக்கழத்திற்குப் போன தன்பிள்ளை என்ன செய்கிறான் என்று கவனிக்கப் பெற்றோரும் அக்கறைப்படுவதில்லை. இதனால் மாணவர்கள் வழி மாறித் தடம் மாறி பண்பற்றுப் போகின்ற ஒரு துன்பியல்நிலை உருவாகி வருகின்றது.
பல்கலைக்கழகங்களிற்கு வெளியே வீடுகளில் நண்பர்களோடு தங்கும் இந்த மாணவர்களை வெள்ளி இரவுகளில் இரவு விடுதிகளில் குடிபோதையில் காணமுடிகிறது. ஆண்- பெண் உறவின் தூய்மை இவர்களுத் தெரிவதில்லை. திருமணம் என்ற சடங்கின் முக்கியத்துவமோ ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாடோ இவர்களுக்கு அறவே இல்லை. மனம் போனபோக்கில் வாழ்ந்து விட்டுப் போவது தான் இவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது. இவ்வாறு வெளியே தங்கும் மாணவர்கள் எல்லோருமே வழி மாறிப் போகின்றார்கள் என்று குற்றம் சாட்டுவது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. ஆனால் வழி மாறிப் போகின்றவர்கள் விழுக்காடு அதிகரித்துப் போகின்றது என்ற திடுக்கிடும் உண்மையை உணரவைப்பதே இக்கட்டுரையின் எண்ணப்பாடு.
வெள்ளையரின் பண்பாட்டில் திளைத்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு தமிழர் பண்பாட்டின் மேன்மையைப் புரியவைப்பது என்பது இங்கு குழப்பமான விடயம். ஆண், பெண் எனத் தனித்தனியே வீடுகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும் ஆண்களிருக்கும் வீட்டுக்குப் பெண்கள் போவதும் பெண்ணிருக்கும் வீட்டுக்கு ஆண் போய்த் தங்கிவிட்டு வருவதும் மிகச்சாதாரணமாக நடக்கின்றது. இரவு விடுதிகளுக்குப் போகும் ஆண்களும் பெண்களும் குடிப்பதும் கட்டியணைத்து நடனமாடுவதும் பண்பாட்டின் தலைசிறந்த கூறுகள் என்று இவர்கள் நினனத்துக் கொள்கின்றார்கள். அவ்வாறு நடந்து கொள்ளாமல் ஒதுங்கியிருக்கும் மாணவர்களை கோழைகள் என்றும் ஆண்மையற்றவர் என்றும் இவர்கள் கேலி செய்கிறார்கள். இதனால் இது போன்ற செயல்களில் ஈடுபடவிரும்பாத மாணவர்களும் தாங்கள் செய்வது தவறோ என்று எண்ணத் தலைப்படுகின்றார்கள்.
தமிழர்கள் நடத்தும் கேளிக்கை இரவு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் வெள்ளையர் போல் உடையணிவதும் தலைக்கு சாயம் பூசிக் கொள்வதும் ஒயில் என நினைத்துக் கொள்கிறார்கள். இதற்கு இவர்களில் செலவழிக்கும் பணமோ மிக மிக அதிகம். இது போன்ற நிகழ்ச்சிகளில் குடிபோதைக்கும் அடிதடிகளுக்கும் பஞ்சம் இருப்பதில்லை. கேளிக்கை என்ற பெயரில் கேவலங்களை தெரிவு செய்வது ஏனோ என எண்ணத்தோன்றுகிறது. கனடா மண்ணில் பிறந்து வளரும் முதல் புலம்பெயர் தமிழ் மாணவர் தலைமுறை இனிவரும் தலைமுறைக்குப் பண்பாடு என்ற பெயரில் விட்டுச் செல்லப் போவது குப்பைகளையா? நீங்களே சிந்தியுங்கள்.

Friday, September 08, 2006
கள்ளுண்ணாமை
தமிழர் பண்பாடுகளுள் ஒன்றாகத் திருவள்ளுவரால் பேசப்பட்டிருக்கும் பொருள் கள்ளுண்ணாமையாகும். இசுலாமிய மதம் போன்ற வேறு சில மதங்களிலும் மது அருந்துதல் மதத்திற்கெதிரான குற்றமாகக் கருதப்பட்டு வருகிறது.
உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரான்
எண்ணப்பட வேண்டாதார்.
என்று திருக்குறள் சொல்கிறது. அதாவது அறிவை மறைத்து மயக்கத்தை உண்டு செய்யும் கள்ளை அறிவுடையோர் உண்ணமாட்டார்கள். சான்றோரால் மதிக்கப்படுவதை விரும்பாதோர் கள்ளை உண்பார்கள்.கள் மனிதனின் அறிவை மழுங்கச் செய்கிறது. அதனால் சான்றோரால் வெறுத்து ஒதுக்கப் படுகிறது.
அறிவியல் உலகிலும் கள் தவிர்க்கபடவேண்டிய ஒன்றே எனச் சான்றுகள் கூறுகின்றன.குடிப்பழக்கம் தொடரும் போது காலப் போக்கில் ஆடவர்கள் அதற்கு அடிமையாகி விடுவதுண்டு. தொடக்கத்தில் சிறியளவில் குடிக்கத்தொடங்கும் இவர்கள் காலப்போக்கில் பெருங்குடிகாரர்களாக உருவாக்கம் பெறுகிறார்கள். பின்னர் ஒரு காலத்தில் தன் தவற்றை உணர்ந்து திருந்தி மதுவைத் தவிர்க்க நினைக்கும் போது அவர்களால் அது முடியாமல் போகிறது. காலங்காலமாக மது மயக்கத்தின் பிடியில் இருப்போரால் அதை விடுத்து சாதாரணமாக இயங்க முடிவதில்லை. மது என்ற அரக்கனின் கோரப் பிடியிலிருந்து வெளிவருவதற்கு இவர்கள் மருத்துவ உதவியை நாடவேண்டி இருக்கிறது. முழுமையான மனக்கட்டுப்பாடும் பொறுமையும் இல்லாதவர்கள் மருத்துவ உதவி கிடைத்தாலும் இதிலிருந்து மீண்டுவர முடியாது திண்டாடுவர்.
இவ்வாறு உடல் நலத்திற்கும் பண்பாட்டிற்கும் தீது விளைவிக்கும் கள்ளை ஏன் ஆண்கள் விரும்பி அருந்துகின்றார்கள்? குறிப்பாகப் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் வாழும் ஆண்கள் சிறுவயதிலேயே குடிப்பழக்கத்திற்கு ஆளாகிவிடுகிறார்கள். கல்லூரி வாழ்க்கையும் நண்பர்களும் இவர்களுக்கு குடிப்பழக்கத்தை அறிமுகப் படுத்துகின்றன. தமிழர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்களும் மேற்குலகின் பண்பாட்டுத் தாக்கத்தில் அறிமுகமான குடிப்பழக்கத்தைத் தவறல்ல என்று சொல்வது கேலிக்கிடமானது. இதற்கு இவர்கள் சொல்லும் காரணம் (Table Manners) மேசைப் பண்பாடு. தமிழர் அல்லாத மற்ற இனத்தைச் சேர்ந்தவர்களோடு உரையாடுவதற்கும் அந்த சமூகத்தோடு ஒட்டி உறவாடுவதற்கும் இந்த மது விருந்துபசாரம் பெரிதும் உதவுவதாக இவர்கள் கதை விடுவார்கள். ஆனால் உண்மை நிலையை உற்றுநோக்கினால் வேற்றினத்தைச் சேர்ந்த மக்கள் குடிப்பழக்கம் இல்லாதவர்களைத் தவிர்த்தோ அல்லது குடிக்குமாறு வற்புறுத்தியோ நடந்து கொள்வதில்லை. ஒருவர் குடிக்க விரும்பவில்லையானால் கிண்டல் செய்யாமல் அவருடைய உணர்வை மதித்து அவர்கள் நடந்து கொள்வதைப் பல இடங்களில் காணக்கூடியதாக இருக்கிறது. மற்றவர் தன்னை தன் குடிப்பழக்கத்தோடு அங்கீகரித்துக் கொள்ளவேண்டும் என்பதற்காகக் கூறப்படும் பொய்ச்சாக்கு இதுவாகும்.
அடுத்தாக இவர்கள் முன்வைக்கும் காரணம் குடிக்கும் ஆண்களைப் பெண்கள் விரும்புகிறார்கள். ஒரு ஆண் குடிப்பழக்கம் அற்றவனாக இருக்கும் போது அவனைக் கோழை அல்லது ஆண்மையற்றவன் எனப் பெண்கள் கருதுவார்கள் என ஒரு சில ஆண்கள் சப்பைக் கட்டுக் கட்டுகிறார்கள். புலம்பெயர்வாழ் நாடுகளில் பிறந்து வளரும் பெண்களிடையே இது போன்ற ஒரு கருத்து இருக்கலாம் என்று வைத்துக் கொண்டாலும், அடுத்தவரின் கவனத்தைத் திசை திருப்ப இது போன்ற விரும்பாத செயலைச் செய்வது கோழைத்தனம் அல்லவா? இது குறித்து திருவள்ளுவர் கூறியிருப்பதை உற்று நோக்குவோம்.
நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும்
கள்ளென்னும்பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.
அதாவது கள் என்று சொல்லப்படுகிற குற்றத்தை உடையவனை "நாண்" என்னும் உயர் பண்பைக் கொண்ட பெண் காண அஞ்சி முகத்தைத் திருப்பிக் கொள்வாள். நல்லொழுக்கம் கொண்ட பெண் குடிப்பழக்கம் உடைய ஆணைக் கண்டு அஞ்சி ஒதுங்குவாள். ஆக, நல்லொழுக்கம் கொண்ட எந்த ஒரு பெண்ணும் குடிக்கும் ஆடவரை விரும்பமாட்டார்கள். ஆகவே, பெண்களுக்குப் பிடிப்பதனால் தான் குடிக்கின்றோம் என்ற வாதமும் இங்கு தவிடு பொடியாகிப் போகிறது.
அடுத்து வள்ளுவர் கூறும் குறள் மிக முக்கியமான ஒன்று.
கையறியாமை உடைத்தே பொருள் கொடுத்து
மெய்யறியாமை கொளல்.
அதாவது, தன்கைப் பொருள்(பணம்) கொடுத்து உடலை நிலைகுலையைச் செய்யும் அறியாமையைக் கொள்பவன் தன் பழவினையைப் பயனை தனக்குக் காரணமாய் உடையதாகும், ஆதாவது முற்பிறப்பில் தான் செய்த பாவங்களை தனக்குரியதாக்கி அதனைச் சுமப்பதற்கு ஒப்பானதாகும்.இங்கு குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், இந்த குடிபோதைக்காக இந்த இளைஞர்கள் கொடுக்கும் விலை அதிகமாகும். உடல் நலத்திற்கு தீங்கான விடத்தை ஒத்த மதுவை அதிக விலை கொடுத்து உண்பவனை முட்டாள் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது?

Sunday, August 20, 2006
பணம் கொடுத்து பண்பாட்டை விற்கும் தமிழ்க் கனடியர்.
கனடா வாழ் புலம்பெயர் தமிழர் மத்தியில் அண்மைக் காலமாகப் புதுவிதமான ஒரு பண்பாடு துரித கதியில் வளர்ச்சி கண்டு வருகிறது. திருமண சடங்குகளில் slide show எனப்படும் ஒளிப்படத்தொகுப்பு திருமணங்களுக்கு வரும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் காட்டப் படுகிறது. இந்த ஒளிப்படத் தொகுப்புகளில் இவர்கள் மணமகனையும் மணமகளையும் பூங்காக்களிலும் கடற்கரைகளிலும் மற்றும் Scarborough Centre போன்ற பொது இடங்களிலும் ஓடவிட்டும் ஆடவிட்டும் ஒளிப்படங்களாக்குகின்றார்கள். திரைப்படங்களில் வரும் பாடற்காட்சிகளில் வரும் நடிகனும் நடிகையும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து முத்தமிட்டு தழுவிக்கொள்வது போல் மணமகனையும் மணமகளையும் செய்யுமாறு சொல்லி அதை ஒளிபடமாக்கி அதனைத் திருமண வீடுகளில் திரையிடுகிறார்கள். இதில் வரும் மணமகனும் மணமகளும் வேறு வேறு இடங்களில் மேற்கத்து மற்றும் பண்பாட்டு உடைகளில் வருகிறார்கள். திருமணத்திற்கு வரும் உறவினருக்கு இதனைக் காட்டவேண்டும் என்ற ஆர்வத்தில் மணமக்களை திருமணத்திற்கு முன்னரே இது போல் கட்டியணைத்து முத்தமிட்டு திருமணத்திற்குப் பின் நான்கு சுவற்றுக்குள் நடக்கவேண்டியவற்றையெல்லாம் படம் பிடித்து திரையிட்டுக் காட்டுகிறார்கள். இவ்வாறான ஒளிப்படங்களைப் பிடிப்பதற்கு இவர்கள் கொடுக்கும் விலை கனடியப் பணமதிப்பில் $ 3,000.
ஒளிப்படம் பிடிப்பவர்களின் வியாபார நோக்கத்திற்குப் பலியாவது கனடா வாழ் இளைய தலைமுறையினர். கனடியப் பண்பாட்டி ஊறி வளரும் அவர்களுக்கு இது போல் மற்றவர் முன்னர் அணைப்பதோ முத்தமிடுவதோ பெரியவிடயம் அல்ல. இது அவர்களுக்கு மிகச் சாதாரண ஒரு நிகழ்வே. ஆனால் அந்த மணமக்களுடைய பெற்றோர் இதை வரவேற்பதும் ஆதரிப்பதும் சற்று வியப்பாகவும் எரிச்சலூட்டுவதாகவும் உள்ளது. இந்தப் பெற்றோருடைய காலத்தில் இவர்கள் எடுக்கும் திருமணப்படங்களில் இவர்கள் தத்தமது வாழ்க்கைத்துணைக்கு நெருக்கமாக நின்றிருக்கமாட்டார்கள். மணமகளை அந்த ஆண் எந்தப்புகைப்படத்திலும் தொட்டபடி நிற்கமாட்டான். ஆனால் அதற்குப் பின் வந்த தலைமுறையினர் ஒருவர் தோள் மீது ஒருவர் கைவைத்தும் ஒருவர் கையை மற்றவர் பற்றியவாறும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இருந்தபோதும் மணமக்களுக்கு இது போன்ற படங்களை எடுக்கும் போது ஒருவிதமான தயக்கமும் கூச்சமும் இருக்கும்.
இதில் குறிப்பிடத்தக்கவிடயம் என்னவென்றால் இது போன்ற ஒளிப்படங்களை எடுக்கும் இன்றைய தலைமுறை இளைஞர்கள் கனடாவில் பிறந்தவர்கள் அல்லர். இவர்கள் 10 முதல் 12 வயதிற்குள் கனடாவிற்கு ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள். இவர்களுக்கு தமிழ்த் திரைப்படங்களின் மீதிருக்கும் அதீத மோகமும் பாடற்காட்சிகளின் மீது இருக்கும் அளப்பரிய கவர்ச்சியுமே இவர்களை இது போன்ற புகைப்படங்களை எடுக்கத்தூண்டுகின்றன. தமிழர் பண்பாடும், ஆண்- பெண் உறவை வெளிச்சமிட்டுக் காட்டக்கூடாது என்ற எண்ணமும் இவர்களுக்கு இருப்பதில்லை.
திருமணத்திற்கு முன்னர் மணமக்கள் ஒருவரை ஒருவர் தொடுவதோ நெருங்கிப் பழகுவதோ காதலிக்கும் போது நெருக்கமாக இருப்பதோ பண்பாட்டின் படி தவறாகும். ஆணும் பெண்ணும் கருத்தொருமித்துப் பழகுவதும் மனதால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடப்பதும் தவறல்ல. ஆனால் திருமணம் என்றொரு பாலம் இருவரிடையேயும் ஏற்பட்டு சட்டப்படியும் உறவினர் முன்னிலையிலும் கணவன் மனைவி என்ற அங்கீகாரம் கிடைக்கும் வரை தொடுதலை தவிர்க்கலாம். புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் ஆண் பெண் உறவு திருமணத்திற்கு முன்னர் இருப்பது மிகச் சாதாரண விடயம் என்று நீங்கள் எடுத்துக் கொண்டாலும், உறவினர் முன்னிலையிலும் திருமணத்திற்கு வரும் தமிழரல்லாத வேற்றினமக்கள் மத்தியிலும் இது போன்ற கேவலமான ஒளிப்படத் தொகுப்புகளைப் போட்டு தமிழர் பண்பாடு இது தான் என்ற எண்ணத்தை வளரும் தமிழ் சமூகத்தின் மத்தியிலும் மற்றைய இனத்தவரிடமும் விதைக்காதீர்கள். பணத்தைச் செலவு செய்து பண்பாட்டை விற்காதீர்கள்.

Wednesday, August 09, 2006
மண் வாசனை
வெளியே நிலாக்காய்ந்து கொண்டிருந்தது. முற்றத்துத் தென்னை மரக்கீற்றிடைவெளிகளில் நிலவொளி புகுந்து விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தது. முற்றத்துக் கயிற்றுக் கட்டிலில் பாய்விரித்துப் படுத்திருந்த கனகம் மெல்லப் பெருமூச்சு விட்டுக் கொண்டாள். மெல்லிய கூதலோடு கூடிய தென்றல் அவள் உடலை வருடிக் கொண்டிருந்தாலும் உள்ளே மனம் கொதித்துக் கொண்டிருப்பது அவளின் அனல் போன்ற பெருமூச்சில் புலப்பட்டது. " வன்னிக்கு மாடு சாய்க்கவென்று போன மனுசன். போய் இன்றோடு இரண்டு கிழமையாகப் போகுது. அப்படி என்னதான் செய்யுதோ தெரியவில்லை. வீட்டில் மனிசி பிள்ளையள் தனிய இருக்குங்கள் எண்ட நினைப்பிருந்தால் இப்பிடி இருப்பரே ". உள்ளே மகள் கண்மணி விழித்தெழுந்து சிணுங்கிக் கொண்டிருப்பது தெரிந்து திடீரென்று விழித்துக் கொண்டாள். " கனகம், மோள் எழும்பி அழுகிறாள் போல இருக்குப் பிள்ளை. ஒருக்கா வந்து பாரன் " திண்ணையில் படுத்திருந்த மாமியார் குரல் கொடுத்தார். மெல்லிய தூங்கக் கலக்கத்தோடும் எரிச்சலோடும் வாயிற்கதவை திறந்து உள்ளே போய் பார்த்தாள். நிலைப்படிக்கருகில் இருந்த தூணில் தொங்கிக் கொண்டிருந்த தூண்டாமணி விளக்கை மெல்லத் தூண்டி விட்டு வீட்டிற்குள் ஒளிபாய்ச்சினாள். கூடத்து மண் தரையில் மகள் கண்மணி சுருண்டு படுத்திருப்பது தெரிந்தது. "என்ன பிள்ளை, ஏன் சுருண்டு படுத்திருக்கிறாய்? என்ன மோனை செய்யுது?" "அம்மா, என்னண்டு தெரியல்லையணை. காத்தால இருந்து ஒரே வயிற்றுக் குத்து. இப்ப கொஞ்சம் கடுமையா இருக்கு. குத்து தாங்கமுடியாமல் இருக்கணை. ஏதாவது மருந்து, கிருந்து இருந்தால் தாணை" " கொஞ்சம் பொறு பிள்ளை. கசாயம் வைச்சுத் தாறன். காத்தால விடிஞ்சதும் பரியாரி வீட்டுக்குப் போய் மருந்தெடுப்பம்." அடுக்களையில் நுழைந்து முந்தநாள் பெய்தமழையில் நனைந்து ஊறிப் போயிருந்த விறகை தணலில் கொஞ்ச போட்டுவைத்தாள். அடுக்களைத் தட்டிலிருந்த தகரப்பேணிகளில் சுக்கைத் தேடிக் கண்டுபிடித்து கொத்தமல்லி போட்டுக் காசாயம் வைத்து முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது அவளுக்கு. இந்த நேரத்தில் ஒத்தாசைக்குப் பக்கத்தில் இல்லாமல் வன்னிக்கு மாடு சாய்க்கப் போன மனுசன் கந்தப்பு மீது கோபம் கோபமாக வந்தது. " ஊரில் யாருக்கு மாடு வேணுமென்றாலும் இந்தா நான் போய் வாங்கி வாறன் என்று போகவேண்டியது. இங்க குடும்பம் குட்டியள் தனிய இருக்குங்கள் என்ற நினைப்பே இல்லாமல் இருக்கவேண்டியது. இந்த இராத்திரி நேரத்தில் பிள்ளை ஏலாமல் படுத்திருக்கிறாள். திடீரென்று உடம்பிற்கு முடியாமல் போய் பரியாரி வீட்டுக்குப் போவதென்றால் இவளால் வண்டி கட்டிக் கொண்டு போகமுடியுமோ இந்த நேரத்தில. மனிசி, பிள்ளையளின்ர நினைப்பு கொஞ்சமாவது இருந்தால் இப்படி போய் கிழமைக்கணக்கில வராமல் இருக்குமெ இந்த ஆள்." கோபத்தோடு முணுமுணுத்தபடி கயிற்றுக் கட்டிலில் வந்து படுத்தவள் எப்படியோ தூங்கிப் போனாள். வீதியில் மாட்டுவண்டிச் சத்தம் கேட்டுத்திடுக்கிட்டு எழுந்தவள் நேரத்தைப் பார்த்தாள். இன்னும் கிழக்கு வெளுக்கவில்லை. தோட்டத்தில் வேலை தேங்கிப் போய்க் கிடக்கு. வெயிலேற முந்தி மிளகாய்க் கன்றுக்கு தண்ணி இறைக்கவேண்டும். அப்படியே வெங்காயப்பூ முறிக்கவேண்டும். அங்கங்கே முளைத்திருக்கும் புல் பூண்டுகளைப் பிடுங்கி எறியவேண்டும். இப்ப விட்டால் பிறகு வெறும் புதர்க்காடு தான் மிஞ்சும். கடைசியில் வெங்காயத்தைத் தேடித்தான் பிடிக்கவேணும். அவசர அவசரமாக எழுந்து கிணற்றடியில் போய் முகத்தை அலம்பி கூந்தலை அள்ளி முடிந்து ஒரு கொண்டை போட்டாள். உள்ளே வந்து தேநீர் போடுவதற்காக அடுப்பை ஊதி மூட்டிவிட்டு கூடத்திலிருந்த தூண்டாமணி விளக்கைக் கொஞ்சம் தூண்டி விட்டாள். திண்ணையில் படுத்திருந்த மாமனார் சத்தம் கேட்டு விழித்து, " என்ன பிள்ளை விடிஞ்சிட்டுதெ? " குரல் கொடுத்தாள். " ஓம் மாமா. தோட்டத்தில கனவேலை கிடக்கு இன்றைக்கு. மிளகாய்க் கன்றுக்கு தண்ணி இறைக்கவேண்டும். துலா மிதிக்க ஆள் இல்லை. நீங்கள் தான் வரவேணும்.மகனைத் தண்ணி மாறவிடலாம். பள்ளிக்கூடம் தொடங்கிறதுக்கு முந்தி முழுக்க இறைச்சு முடிச்சமென்றால் தம்பி பள்ளிக்கூடம் போகலாம். பிள்ளை வயிற்றுக்குத்து என்று ஏலாமல் படுத்திருக்கிறாள். அவளைப் பரியாரி வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போகவேணும். இறைச்சுப் போட்டு வந்து வெளிக்கிடுவம். "என்றாள்.
Tuesday, August 01, 2006
Subscribe to:
Posts (Atom)