
நேற்று மனிதர்கள்
காற்றில் போயினர்.
இருபதனாயிரம் உயிர் குடித்த
இறுதிப் போர் இது
இந்திரா தேசமெமக்கு உதவும்
என இறுமாந்திருந்தோம்-அது
இரக்கமற்ற தேசமென்று இன்று
நாம் கண்டுகொண்டோம்.
ஓடி ஓடிப் போராட்டம் நடத்தினோம்
ஓயாமல் தெருவெங்கும்
ஓலமிட்டு நாம் அழுதோம்.
இலண்டனின் வீதிகளில்
இராப்பகலாய் நாம் நின்றோம்
கனடாவின் தெருக்களிலும்
கலங்கிப்போய் நாம் நின்றோம்
வாசிங்டன் டிசியிலும்
வாடிப்போய் நாம் நின்றோம்
நோர்வேயின் தலைநகரில்
நொந்து போய் நாம் நின்றோம்
உலகத்தின் தெருக்களெல்லாம்
உறவுக்காய்க் கொடிபிடித்தோம்
உயிரற்ற பிணங்களாக
உணர்வின்றி நாம் விழுந்தோம்
தேற்ற ஒரு நாதியின்றித்
தேசமெங்கும் நாம் அழுதோம்
சாவுக்குக் கணக்கு வைக்க சனம்
சாதியின்றி நாம் இறந்தோம்
காந்தி தேசமும் கிட்லர் தேசமாகிவிட
சீன தேசமும் சாவுமணி எமக்கடிக்க
ஐயா நாம் என்ன தவறு செய்தோம்?
ஐநாவும் கைவிரிக்க
எங்கள் பிணக்குவியலின் மேல்- கட்டி
எழுப்பப்பட்ட போர் வெற்றியிலே
சிங்களவன் மகிழ்ந்திருக்க- முகாம்
சிறைகளிலே நாம் துடிக்க
இனவெறிபிடித்த சிங்களனின் -காம
இச்சைக்கு நாம் பலியாக
நள்ளிரவு வேளையிலேயே- நாயாக
நாம் களையெடுக்கப்பட
எம் உறுப்பறுத்துச் சிங்களவன்
உலகமெலாம் விலைபேச
பொறுப்புள்ள மேற்குலகம்
பேசாமல் கண்ணுறங்க
ஐயா நாம் என்ன தவறு செய்தோம்?
ஐநாவும் கைவிரிக்க

6 comments:
மனதை அறுக்கும் கேள்விகள்!!
:(
//காந்தி தேசமும் கிட்லர் தேசமாகிவிட
சீன தேசமும் சாவுமணி எமக்கடிக்க
ஐயா நாம் என்ன தவறு செய்தோம்?
ஐநாவும் கைவிரிக்க//
நாடுகளுக்குள் எதேனும் பிரச்சனைகள் வருமெனில் நாட்டாமையாக ஐ.நா வந்து தீர்க்கும் என்ற நம்பிக்கை பொடிப்பொடியாக தகர்ந்தது!
இனி வரும் காலங்களில் நாடுகளிக்கிடையில் நடைப்பெறப்போகும் சண்டை சச்சரவுகளை கொலை பலிகளை காட்சிகளாய் பார்த்து ரசிக்கப்போகும் பார்வையாளர்களாக - பாவிகள்!
இந்திரா தேசமாக இருந்திருந்தால் உதவியிருப்போம். இது இத்தாலி தேசமாய்ப் போனதால் வந்த விளைவுதான் சகோதரி இது :-((
சகோதரி, உலகிலுள்ள அனைவரையும் குற்றம் சொல்கிறீர். ஆயின் தங்கள் மேல் குறையுள்ளதா என யோசிக்க மறுக்கிறீர். அனைத்து தளங்களிலும் 'காந்தி தேசத்தை' கரித்து கொட்டுகிறீர்கள்; மாபாதகம் நிகழ்த்தி விட்டு 'அது மரணதண்டனை' என்கிறீர்கள். ஆனால் போர்முனையில் பின்னடைவு ஏற்பட்டால் நாங்கள் ஓடி வர வேண்டும் என்கிறீர். எப்படி வருவோம்?
பழையதை பேசியதற்கு மன்னிக்க! பிறரை குற்றம் சொல்வதை விடுத்து, அந்த மண்ணிலே அமைதி திரும்ப, இன ஒற்றுமை ஏற்பட வழிவகுப்பதே இத்தருணம் செய்யத்தக்கது என்பது என் கருத்து.
வணக்கம் மிகப் பெரிய கிறுக்கரே(XL moron)
உங்களை ஓடிவர கேட்கவில்லை... ஒதுங்கி நிற்ககேட்டோம்.. நீங்கள் ஒத்தூதுகிறீர்கள் உங்கள் தேசத்து "சன நாயகத்தை". மாபாதகம் செய்துவிட்டோம் சரி.. மன்னித்துவிடுங்கள். நீங்கள் கொடுத்த மரணதண்டனைகள் அப்பாவி மக்களையும் கொன்று குவித்ததேயாம்.. பழிக்கு பழி முடிந்துவிட்டது.. மகிழ்ச்சியா?.. ஒரு உயிர்= பல ஆயிரம் உயிர்கள்.. சமன்பாடு நன்றாகவே இருக்கிறது.. மகிழ்ச்சி...(உங்கள் தேசம் உதவவில்லை ஒன்றும் செய்யவில்லை என்று முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் கதையை மறுபடியும் சொல்லாதீர்கள்.) எங்கள் தவறுகளை நாங்கள் எம் மனதிற்குள் மீட்டு மீட்டு துன்புறுகிறோம்...
இறுதியில் நீங்கள் சொன்ன இன ஒற்றுமைக்கும் மக்களின் அமைதிவாழ்க்கைக்கும் வருவோம்.. ஐ நாவில் அண்மையில் உங்கள் தேசம் நிகழ்ந்த கூடலுக்கு வருவோம். இன்னும் தீரவில்லையா உங்கள் கோபம்? ஆயுதபோராட்டத்தை ஒடுக்கினீர்.இப்போது அரசியல் போரையும் ஒடுக்குகிறீரே.. உம் தேசத்தின் பதில் என்ன? இப்போதும் ஈழத்தையா கேட்டார்கள்..மனித நேயத்தை கேட்டோம். மீண்டும் சனநாயகத்தின் வழிதோன்றலான வாக்கெடுப்பு வென்றது, இனப்படுகொலையை நியாயப்படுத்த.. அருமை!!!
பனையால் விழுந்தவனை மாடு ஏறிமிதித்த கதையாம்..
-விடுதலை
//மாபாதகம் நிகழ்த்தி விட்டு 'அது மரணதண்டனை' என்கிறீர்கள். //
Mr. XLMoron,
Looks like you have some logical thinking. Please don't use the logic selectively for India and Sonya.
The Italian Sonya Gandhi and her idiotic drug-addict son Rahul Gandhi have used the Indian government (Indian people's money - yours and mine) to take revenge on LTTE just for killing a single person Rajiv. In that process, they helped the genocide of about 30000-40000 innocent Tamil civilians. You seem to justify this revengeful act of the Italian Sonya and her drug addict son Rahul Gandhi.
Why don't you justify the TTE killing Rajiv just in revenge of him killing 6000 Tamils and numerous crimes by the Indian Army sent by Rajiv?
Just try to have common sense before jumping your gun on this blogger.
Post a Comment